பிரசாந்த் நடிக்கும் ‘சாகசம்’

Saahasam First look 01‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி “செம்பருத்தி, திருடா திருடா, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, ஹலோ, பார்த்தேன் ரசித்தேன், தமிழ், வின்னர், பொன்னர் சங்கர், மம்பட்டியான்” போன்ற பல  படங்களில் நடித்த பிரசாந்த் அடுத்து நடித்து வரும் படத்திற்கு ‘சாகசம்’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.

“சாகசம், மோதிப்பார், அஸ்திரம்’ என்ற பெயர்களை ரசிகர்களிடம் கொடுத்து இவற்றில் ஒரு பெயரை தேர்வு செய்யச் சொல்ல,  ரசிகர்கள் ‘சாகசம்’ என்ற பெயரைத் தேர்வு செய்துள்ளார்கள்.

மிகப் பிரம்மமாண்டமாகவும், புதிய தொழில்நுட்பங்களுடன் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்கள். படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

பிரசாந்துக்கு மீண்டும் ஒரு பேர் சொல்லும் படமாக இப்படத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் அவருடைய தந்தை தியாகராஜன்.

மற்ற விவரங்கள் விரைவில்…

Read Previous

V 4 – Awards 2013

Read Next

விகடன் விருதுகள் 2013 – விவரம்…

Most Popular