வெளிநாடுகளில் படமாகும் ‘ஜெய்ஹிந்த் 2’

jaihind 2-0214_00021ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி ,இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ‘ஜெய்ஹிந்த் -2’.

கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் .

சிம்ரன் கபூர் என்ற மும்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார்.

மற்றும் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவி காலே, அதுல் மாதூர், மயில்சாமி ,மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமீத்திவாரி, பேபி யுனிதா ஆகியோரும்  நடிக்கிறார்கள்.

படம்  பற்றி பேசிய அர்ஜுன்,

“தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இதை உருவாக்குகிறேன். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்தது விட்டது.

சமீபத்தில் பாங்காக்கில் ஒரு சண்டை காட்சியை படமாக்கினோம்.ராணுவம் சம்மந்தப்பட்ட இடம் அது. சுமார்பத்து ஏக்கர் அந்த இடம் முழுக்க உபயோகம் இல்லாத பிளைட்கள், படகுகள், கார்கள், என குவிந்து கிடந்தது. அங்கே அமெரிக்க ஸ்டன்ட் கலைஞர்களுடன் மோதும் காட்சிகள் பத்து நாட்கள் படமானது.

இது என் இயக்கத்தில் ஒரு லட்சியப் படம் என்றே சொல்லலாம். ஒரு நாட்டின் வளர்ச்சி கல்வியை பொறுத்தே அமைகிறது என்கிற கருத்தை வலியுறுத்தும் படமாக ஜெய்ஹிந்த் -2 இருக்கும்.

அடுத்து மும்பையில் 20 நாட்களும் லண்டனில்  20  நாட்களும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

சென்னையில் 20 நாட்கள் படப்பிடிப்புடன் படம் முடிந்து விடும்,” என்கிறார் அர்ஜுன்.

Read Previous

விகடன் விருதுகள் 2013 – விவரம்…

Read Next

இன்றைய ரிலீஸ் – 7 படங்கள்