2014ம் ஆண்டின் முதல் வெள்ளிக் கிழமையான இன்று ஜனவரி, 3ம் தேதி வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
நம்ம கிராமம்
குணசித்ரா மூவீஸ் தயாரிப்பில் மோகன் சர்மா இயக்கத்தில் பி.எம்.சுந்தரம் இசையமைப்பில் மது அம்பாட் ஒளிப்பதிவில், பி.லெனின் படத்தொகுப்பில் மோகன் சர்மா, நிஷன், ஷம்விருதா, நெடுமுடி வேணு, சுகுமாரி, ரேணுகா, ஃபாத்திமா பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம்.
2011ம் ஆண்டிற்கான சிறந்த குணச்சித்திர நடிகை விருதை சுகுமாரிக்கும், சிறந்த ஆடை வடிவமைப்புக்காக இந்திரன்ஸ் ஜெயனுக்கும் தேசிய விருதை பெற்றுத் தந்த படம்.
அம்மா அம்மம்மா
ஆ. சந்திர சேகர் திரைக்களம் தயாரிப்பில் பாலு மணிவண்ணன் இயக்கத்தில் எம்.வி. ரகு இசையமைத்துள்ள படம். சம்பத், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த், சுஜிதா, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அகடம்
லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் முகமது இசாக் இயக்கத்தில் கே.பாஸ்கர் பின்னணி இசையமைத்துள்ள படம். தமிழ், ஸ்ரீபிரியங்கா, பாம்பே பாஸ்கர், ஸ்ரீனி ஐயர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு
டிஎஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஸ்ரீகிருஷ்ணா இசையமைத்திருக்கும் படம். புதுமுகம் ஆதவா ராம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அத்திமலை முத்துப்பாண்டி
கிருஷ்ணாலயா மூவீஸ் தயாரிப்பில் தஞ்சை ஆர். ரகுபதி இயக்கத்தில் ஏ.கே.ஆல்ரின் இசையமைத்திருக்கும் படம். சாரதி ஆறுமுகம், சொப்னா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
என் காதல் புதிது
வீரா மூவீஸ் தயாரிப்பில் மாரீஷ் குமார் இயக்கத்தில் சத்யதேவ் இசையமைத்திருக்கும் படம். ராம் சத்யா, உமாஸ்ரீ, நமீதா பிரமோத் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
முன் அந்தி சாரல்
ஃபோகஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தேவேந்திரன் இயக்கத்தில் யூதா ஷாலோம் இசையமைத்துள்ள படம். அன்சார், ஆனந்த், முரளி, நட்சத்திரா, சங்கவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இவற்றுடன் மலையாள சினிமாவைத் தோற்றுவித்த ஜே.சி.டேனியலின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘செல்லுலாய்ட்’ மலையாளத் திரைப்படத்தின் தமிழாக்கமான ‘ஜே.சி.டேனியல்’ படமும் இன்று வெளியாகிறது.






