பொங்கலுக்கு வெளிவரும் ஒரே படம்…

vidiyum varai pesuதீபாவளி, பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு ஆகிய மூன்று நாட்கள் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் முக்கிய நாட்கள்.

ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த இந்த நடைமுறை சமீப காலமாக மாறி விட்டது.

இந்த பண்டிகைகளுக்காக விடப்படும் விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு, அதற்குள்ளாகவே படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு சில நாட்கள் முன்னதாகவே வெளியிட ஆரம்பித்து விட்டார்கள்.

கடந்த தீபாவளிக்கு இப்படித்தான் நடந்தது. இன்னும் பத்து நாட்களில் வர உள்ள பொங்கலுக்கும் இப்படித்தான் நடக்கப் போகிறது.

அடுத்த வெள்ளியன்று பொங்கலுக்கு  நான்கு நாட்கள் முன்னதாகவே அஜித் நடித்துள்ள ‘வீரம்’, விஜய் நடித்துள்ள ‘ஜில்லா’ படங்கள் 10ம் தேதி வெளிவர உள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகி விட்டது.

அப்படியென்றால் பொங்கலன்று 14ம் தேதி எந்த படமும் வரவில்லையா என்று கேட்போருக்காகவே, அன்று ‘விடியும் வரை பேசு’ என்ற படத்தை வெளியிட உள்ளார்கள்.

ஏ.பி. முகன் இயக்கத்தில் மோகன்ஜி இசையமைத்துள்ள இந்த படத்தில் அனித், நன்மா, வைதேகி, மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில் இன்னும் ஒரு சில படங்கள் வெளிவர வாய்ப்புள்ளதா என்பது சில நாட்களில் தெரிந்து விடும்.

அதுவரை பொங்கல் ரிலீசுக்கு ஒரே படம்,  ‘விடியும் வரை பேசு’.

Read Previous

சூர்யாவின் அடுத்த படம் ‘கல்யாணராமன்’

Read Next

‘நண்பேன்டா’ அடுத்த மாதம் ஆரம்பம்…