சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் பற்றிய முறையான அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிகிறது.
இதற்கடுத்து சூர்யா, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பெயர் ‘கல்யாணராமன்’ என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாக இப்படத்தை உருவாக்கப் போகிறார்களாம். பொதுவாகவே, வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் இப்படிப்பட்ட பாணிதான் இருக்கும். அதையே, இந்த படத்திலும் செய்ய முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
சூர்யா, நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்து நீண்ட நாட்களாகி விட்டது. ‘பிதாமகன், மாயாவி’ படங்களுக்குப் பிறகு அவர் சீரியசான ஆக்ஷன் படங்களில்தான் நடித்து வருகிறார்.
அவருக்கும் ஒரு மாற்றம் தரும் விதமாக , வெங்கட் பிரபு இயக்கும் படம் இருக்கும் என்கிறார்கள்.
முக்கியமான விஷயம், படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடமாம்.
மேலும் விவரங்கள் விரைவில்…