அதிரடி நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமான ‘அதிரடி’…

athiradi launch_00006“ராஜாதிராஜ ராஜ குலோத்துங்க ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் , ராவணன், வாழ்க சனநாயகம், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு , என்னைப்பார் யோகம் வரும் மற்றும் லொள்ளுதாதா பராக் பராக்” போன்ற படங்களை எடுத்த ராஜ்கென்னடி பட நிறுவனத்தின் அடுத்த படம் “அதிரடி”.

மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடிக்கும் அதிரடி படத்தின் துவக்க விழா நேற்று, ஜனவரி 5, 2014 சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம்  வடிவில் பிரத்யேகமாகச் செய்யப்பட்ட ஒரு சிறப்பு கேக் வெட்டப்பட்டது.

முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து, இப்படத்திற்கு கதை-திரைக்கதை-வசனம்- பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்க உள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.

படத்திற்கு ‘அதிரடி’ என்று பெயர் வைத்து விட்டு துவக்கவிழாவை அதிரடியாக நடத்தாமல் இருந்தால் நன்றாக இருக்குமா..?

அதனால், ‘அதிரடி’ படத்துவக்க விழாவில், தனது வயிற்றின் மீது 125 கிலோ எடை உள்ள நபரை நிற்க வைத்து உடற்பயிற்சி செய்தது, 50 பச்சை முட்டைகளை 50 நொடிகளில் வாயின் உள்ளே தள்ளியது, வயிற்றில் கற்களை வைத்துச் சம்மட்டியால் உடைப்பது, பீர்பாட்டில்களை வெறுங்கைகளால் உடைப்பது போன்ற அதிரடிச் சாகசங்களை நேரிடையாகச் செய்து காண்பித்து அதிரடி சாகசம் செய்தார் மன்சூர் அலிகான்.

அடுத்து வெறுங்கையால் நெருப்பு எறியு அடுக்கி வைக்கப்பட்ட ஓடுகளை கைகளாலும், நெற்றியாலும் உடைத்தார். அப்போது எதிர்பாரதவிதமாக அவர் தலையில் தீப்பிடித்தது. அங்கிருந்த உதவியாளர்கள் ஓடி வந்து கோணிப் பையால் அழுத்தி தீயை அணைத்தனர்.

தொடர்ந்து குழந்தைகளின் ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து படத்தில் இடம்பெறும் பாடல்களைத் தனது குழந்தைகளுடன் சேர்ந்து மேடையில் பாடினார் மன்சூர் அலிகான்.

தொடர்ந்து  நடிகர் கிங்காங் பள்ளியில் பயிற்சி பெற்ற குழந்தைகளின் ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

முத்தாய்ப்பாக, திருட்டு விசிடிக்கு எதிராகவும் திரையுலகம் படும் பாட்டையும் விளக்கும் விதமாகத் தான் எழுதி இசையமைத்த டைட்டில் பாடலை தனது குழந்தைகளுடனும் தனது படக்குழுவினருடனும் சேர்ந்து பாடினார் மன்சூரலிகான்.

ஜனவரி 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் முதல் படமான அதிரடி , நிஜமாகவே அதிரடியான  நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது

சென்னையிலும்,  கூவம் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

Read Previous

ஜீவா உளறல் – விஜய் ரசிகர்கள் கடும் கோபம்…

Read Next

மீண்டும் இசைக்க வந்தார் இளையராஜா…