‘ஜில்லா’ – 1150 திரையரங்குகளில் ரிலீஸ்…

jilla 1912_00003சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.டி.நேசன் இயக்கத்தில் இமான் இசைமப்பில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி மற்றும் பலர் நடித்துள்ள ‘ஜில்லா’ படம் உலகம் முழுவதும் 1150 திரையரங்குகளில் நாளை வெளியாகிறது.

இத்திரைப்படத்தின் கேரள வினியோக உரிமையை மோகன்லால் பெற்றுள்ளார் என்பதை சில மாதங்களுக்கு முன்பே நாம் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

தமிழ்நாட்டையடுத்து கேரளாவில்தான் இப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒரு நேரடி மலையாளப் படம் எப்படி வெளியாகுமோ அதே அளவில் இப்படம் கேரளாவில் வெளியிடப்படுகிறது. அதற்குக் காரணம் மோகன்லால். மேலும், விஜய் படங்களுக்கு கேரளாவில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 600 திரையரங்குகள், கேரளாவில் 300 திரையரங்குகள் வெளிநாடுகளில் 250 திரையரங்குகள் என மொத்தம் 1150 திரையரங்குகளில், ‘ஜில்லா’ வெளியாகிறது.

வெளிநாடுகளில் போகப் போக திரையரங்குகள் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதுவரை வந்த விஜய் படங்களிலேயே இப்படத்திற்கு உலகம் முழுவதும் நிறைய எதிர்பார்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.

Read Previous

மீண்டும் இணையும் ‘ஊதா கலரு’ ஜோடி…

Read Next

விஜய் டிவி – பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்…