இதுவரை தமிழ்ப் பட உலகில் எந்த வரையிலும் இல்லாத அளவிற்கு ‘வீரம், ஜில்லா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலகம் முழுவதும் வசூலைக் குவித்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
குறிப்பாக சில நாடுகளில் ‘தூம் 3’ படத்தின் வசூலைக் கூட முறியடித்துள்ளது என சொல்கிறார்கள்.
தமிழ்ப் படங்கள் உலக அளவில் இந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்று வருவது ஆரோக்கியமான ஒன்று.
நமக்குக் கிடைத்த அதிகாரபூர்வமற்ற தகவல்களிலிருந்து ‘வீரம், ஜில்லா’ படங்களின் முதல் மூன்று நாள் தோராயமான வசூல் விவரம்…
வீரம்
தமிழ் நாடு – 15 கோடி
கர்நாடகா – 1.25 கோடி
கேரளா – 1 கோடி
மற்ற மாநிலங்கள் – 25 லட்சம்
யுஎஸ்ஏ – 1.25 கோடி
ஆஸ்திரேலியா – 35 லட்சம்
மலேசியா – 78 லட்சம்
ஜில்லா
தமிழ் நாடு – 14 கோடி
கேரளா – 4 கோடி
கர்நாடகா – 1 கோடி
மற்ற மாநிலங்கள் – 35 லட்சம்
யுஎஸ்ஏ – 1.19 கோடி
ஆஸ்திரேலியா – 17 லட்சம்
மலேசியா – 78 லட்சம்
மற்ற வெளிநாடுகளில் வசூலான விவரத்தை விசாரித்து வருகிறோம். விரைவில் அதைப் பற்றி தெரிவிக்கிறோம்.