‘ஜில்லா’ – சிரிக்காத தயாரிப்பாளர்…சிரிக்க வைத்த இயக்குனர்…

jilla success meet_00011‘ஜில்லா’ படத்தின் சக்சஸ் மீட் இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

விஜய், சூரி உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். சில வினியோகஸ்தர்களும் கலந்து கொண்டு படம் ‘துப்பாக்கி’ படத்தை விட அதிகமாக வசூல் செய்து வருகிறது என்று அவர்களது கருத்தைத் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஆர்.டி. நேசன்,

“எனக்கு ‘ஜில்லா’ பட வாய்ப்பைக் கொடுத்த விஜய் அண்ணனுக்கு முதல்ல நன்றி சொல்லிக்கிறேன்.

இந்த ஒரு வருஷமா சூப்பர் குட் ஆபீசுக்குப் போகும் போது, சௌத்ரி சாரோட ஃபோட்டோ ஒன்னு இருக்கும். அந்த போட்டோல சிரிச்சிக்கிட்டேயிருப்பாரு.

ஆனால், கடந்த ஒரு வருஷமா அவர் சிரிக்கவேயில்லை. இப்ப இரண்டு நாளா சிரிச்சிட்டு இருக்காரு. ஓ…இவர் கூட சிரிப்பாரான்னு அப்பதான் தோணுச்சி. என்ன இருந்தாலும், ஒரு டைரக்டருக்கு,  தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தருக்கும் லாபம் தரக் கூடிய படமா அமையணும்னு நினைப்பாங்க.

நான் என்ன கேட்டாலும் அதைக் கொடுத்து, இந்த படத்தை பிரம்மாண்டமா உருவாக்கிக் கொடுத்தாரு தயாரிப்பாளர் சௌத்ரி சார்.

கேரளாவில படத்துக்கு மிகப் பெரிய கலெக்ஷன் வந்திருக்குன்னு, மோகன்லால் சார் கூட போன் பண்ணி பாராட்டினாரு.

என்னோட மொத்த யூனிட்டுக்கும் என்னோட நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன். இன்னைக்கு படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்குன்னா, ரசிகர்களும், பத்திரிகையாளர்களும்தான் காரணம், ” என்றார்.

 

Read Previous

‘வீரம்’ வெற்றிக்கு விஜய் வாழ்த்து…

Read Next

‘வீரம், ஜில்லா’ – 3 நாள் வசூல் விவரம்…

Most Popular