லிங்குசாமி தயாரிப்பு, இயக்கத்தில் சூர்யா, சமந்தா முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் படத்திற்கு ‘அஞ்சான்’ என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பமானது.
படத்திற்கு என்ன பெயர் என்பது பலவாறாக விவாதித்து யோசிக்கப்பட்டது. ‘ரவுடி’ என பெரியடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதன் பின், இந்த படத்திற்கான பெயரை பொங்கலன்று அறிவிக்கப் போவதாகச் சொன்னார்கள்.
அதன்படி, இந்த படத்தின் பெயர் ‘அஞ்சான்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
வரும் கோடை விடுமுறையில் இப்படம் வெளியாக உள்ளது.