‘+2’ படத்தில் நாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து தமிழ், தெலுங்கில் நடித்து வருபவர் சுஜா வருணி.
தற்போது ‘வா டீல், அப்புச்சி கிராமம், பென்சில்’ உட்பல சில படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் சுஜா வருணியைச் சந்தித்த போது கூறியதாவது,
“நான் இப்போ ரொம்ப மாறியிருக்கேன். அனுபவங்கள் மூலம் பாடம் படிச்சிருக்கேன். படங்களை செலக்ட் பண்ணித்தான் நடிக்கிறதுன்னு தீர்மானமா இருக்கேன். இப்ப உண்மையிலேயே சினிமா ட்ரண்ட் நல்லா இருக்கு. புதுப்புது திறமைசாலிங்க வர்றாங்க. இதுதான் படம்..இதுதான் கதைங்கிற பார்முலாவை எல்லாம் ஈஸியா உடைச்சி ஜெயிச்சுக் காட்றாங்க. அதுக்கு ஆடியன்சும் நல்ல சப்போர்ட் கொடுக்கறாங்க.
ஹீரோயின்னா மரத்தைச் சுற்றிவர்றது தொப்புள் காட்டிட்டு போறதுதான், பெரிசா நடிக்கவைக்க வேணாங்கிற கருத்து இன்னைக்கு மாறியிருக்கு. ஹீரோயின்னா தொப்புள் காட்டத்தானா..? இல்லயே. இப்ப ஹீரோயின்களுக்கும் நடிச்சுக் காட்டுற வாய்ப்பு வருது. பெர்பாமென்ஸ்ல ஸ்கோப் இருக்கிற மாதிரியும் படங்கள் வர்றது ஆரோக்கியமான மாற்றம். இப்ப ட்ரண்ட் ரொம்ப ஹெல்த்தியா இருக்கு.
இப்போ பார்வை மாறியிருக்கு, படங்களும் மாறி இருக்கிறதா நெனைக்கிறேன்.”