சென்னை கேளம்பாக்கத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள SMK Fomra Institute of Technology கல்லூரியில் மாணவ மாணவியருடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தார் நமீதா.
மாணவர்கள் மத்தியில் பேசிய நமீதா, “இங்கே எத்தனை பேர் ரத்ததானம் செய்துள்ளீர்கள் என்று கேட்டார். பாதி மாணவர்கள் ரத்த தானம் செய்துள்ளதாகச் சொன்னனர். இவ்வளவு பேர் செய்துள்ளீர்களா என ஆச்சர்யப்பட்ட நமீதா அவர்களை பாராட்டினார். மேலும் உடல் தானம் எத்தனை பேர் செய்துள்ளீர்கள் என்பதற்கு ஏறக்குறைய நூறு பேர் செய்திருந்ததாக கை உயர்த்தினர்.
இது நல்ல மாற்றம். மாணவர்கள் இவ்வளவு சமூக அக்கறையோடு இருப்பது பாராட்டிற்குரியது. வரும்காலம் எனக்கு நம்பிக்கை தருகிறது. படிப்பதோடு சம்பாதிப்பதோடு நமது சமூகம் சார்ந்த சிந்தனையும் மாணவர்களுக்கு வேண்டும். அதை இந்த காலேஜில் பார்க்கிறேன், மகிழ்கிறேன்.
“ரத்ததானம் அல்லது உடல்தானம் செய்தவர்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் அதை செய்ததற்கான சான்றிதழோடு வந்தால் போதுமானது. இதன் மூலம் பல உயிர்கள் நீண்டு வாழும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது,” என்று பேசினார்.