இமான் – யுகபாரதி கூட்டணி முறிந்ததா ?

d imman and yugabarathiஇசையமைப்பாளர் இமான் – யுகபாரதி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெற்றிக் கூட்டணியாக இருப்பவர்கள் பிரிவதும், பின்னர் ஒன்று சேர்வதும் சினிமாவில் வாடிக்கையான ஒன்றுதான்.

இயக்குனர் – இசையமைப்பாளர், இசையமைப்பாளர் – பாடலாசிரியர் இந்த கூட்டணிகள்தான் தமிழ் சினிமாவில் பல நல்ல பாடல்களை வழங்கக் காரணமாக அமைந்துள்ளன.

இப்படி இயக்குனர் – இசையமைப்பாளர்களில் வெற்றிக் கூட்டணியாக இருந்து பிரிந்தவர்களில் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்குத் தெரிந்தவர்கள் செல்வராகவன் – யுவன்ஷங்கர் ராஜா, கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ், ராஜேஷ் – யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர்.

இசையமைப்பாளர் – பாடலாசிரியர் கூட்டணியில் இளையராஜா – வைரமுத்து கூட்டணி போன்று  மிகப் பெரிய ஹிட் பாடல்களைக் கொடுத்து பிரிந்தவர்கள் வேறு யாருமில்லை.

‘மைனா’ படத்திற்குப் பிறகு இமான் – யுகபாரதி கூட்டணி சில வருடங்களாக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்தது. இமான் இசையைமக்கும் படங்களில் சில படங்களுக்கு தனிப் பாடல்களை எழுதி வந்தார் யுகபாரதி.

ஆனால், சமீப காலமாக இமான் இசையமைப்பில் யுகபாரதி ஓரிரு பாடல்களை மட்டுமே எழுதி வருகிறார். இதற்குக் காரணம் இருவருக்கிடையிலும் மனக் கசப்பு என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

இசைக் கூட்டணிக்கும், தமிழ் சினிமாவிற்கும் சரிப்பட்டே வராது போல….

Read Previous

2வது வாரத்தில் ‘வீரம், ஜில்லா’…

Read Next

எம்ஜிஆர் கண்டுபிடித்த கதை ஆசிரியர்…

Most Popular