ஒரு வாரமாகவே தினசரி ‘வீரம், ஜில்லா’ படங்களைப் பற்றி ஏதாவது ஒரு செய்தியை போட வேண்டும் என்பது வாடிக்கையாகிவிட்டது.
ரசிகர்களும், வாசகர்களும் அந்த அளவிற்கு அந்த படங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள். அதிலும், இருவரது ரசிகர்களும் எந்த படத்தின் வசூல் அதிகமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளத் துடிக்கிறார்கள்.
ஆனால் , தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த ஒரு வசூல் நிலவரத்தையும் தோராயமாக மட்டுமே சொல்ல முடியும். இங்குள்ள வியாபார நிலைமை அப்படி.
அதே சமயம் வெளிநாடுகளில் வசூலாகும் தொகையை சரியாகச் சொல்லலாம்.
இரண்டு படங்களும் ஏறக்குறைய உலகம் முழுவதும் 2000த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.
நேற்றுடன் முடிவடைந்த பொங்கல் விடுமுறை நாட்களில் இப்படங்களின் வசூல் ஏறக்குறைய அரங்கு நிறைந்த காட்சிகளாகவே நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று இரண்டு படங்களும் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கின்றன.
மொத்தமாக எவ்வளவு வசூலித்தாலும் சரி, தமிழ் சினிமா வரலாற்றில் கடந்த சில வருடங்களாக வசூல் நிலைமை சரியில்லாத நிலையில், இந்த படங்கள் பலரையும் திரையரங்குகள் பக்கம் வரவைத்ததே மிகப் பெரிய சாதனையாக அமைந்திருக்ம்.
அதே சமயம், கமர்ஷியல் படங்களைத் தவிர மற்ற நல்ல படங்களுக்கும் இம்மாதிரியான வரவேற்பை ரசிகர்கள் தர வேண்டும் என்பதே திரையுலகினரின் விருப்பமாக இருக்கும்.
