ஒரே நாளில், ஒரே தயாரிப்பாளரின் 3 இசை வெளியீடு…

sivappu-enakku-pidikkum

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் , ஜே.சதீஷ்குமார் வழங்கும் மூன்று திரைப்படங்களின் இசை வெளியீடு இன்று நடைபெறுகிறது.

அருள்நிதி, பிந்து மாதவி, அர்ஷிதா மற்றும் பலர் நடிக்க, சிம்புதேவன் இயக்கத்தில், நடராஜன் சங்கரன் இசையமைப்பில் ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தின் சிங்கிள் டிராக் இசை வெளியீடு, விதார்த், ஹார்திகா ரெட்டி மற்றும் பலர் நடிக்க, ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில், ஜோஹன் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘ஆள்’ படத்தின்  இசை வெளியீடு, சான்ட்ரா எமி, யுரேகா, மணிக்குட்டி மற்றும் பலர் நடிக்க யுரேகா இயக்கத்தில், மகேஷ்வரன் இசையமைப்பில் உருவாகியுள்ள படம், ஆகியவற்றி இசை வெளியீடு இன்று சூரியன் எப்.எம். வானொலியில் நடைபெறுகிறது.

இந்த மூன்று படங்களையும், பல தரமான படங்களை வெளியிட்ட ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் வெளியிடுகிறது.

ஒரே தயாரிப்பாளரின் மூன்று திரைப்படங்களின் இசை வெளியீடு ஒரே நாளில் நடப்பது அபூர்வமான ஒரு விஷயம். இன்றைய காலகட்டத்தில் இப்படி நடிப்பதும் ஆச்சரியமாக உள்ளது என திரைப்பட ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Read Previous

இந்த வாரம் 7 தமிழ்ப் படங்கள் ரிலீஸ்… ?

Read Next

வெளிநாட்டு ஒளிப்பதிவாளர்களுக்கு கட்டுப்பாடு…

Most Popular