வெளிநாட்டு ஒளிப்பதிவாளர்களுக்கு கட்டுப்பாடு…

sica-news

இந்தியாவில் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய விரும்பும் வெளிநாட்டு ஒளிப்பதிவாளர்களுக்கு, அகில இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் கூட்டமைப்பு சில கட்டுப்பாடுகளை  விதித்துள்ளது.

அதை மீறி அவர்கள் செயல்பட்டால், அவர்கள் பணியாற்றும் படங்களின் படப்பிடிப்பை தடை செய்வோம் என அறிவித்துள்ளார்கள்.

அகில இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கங்கள் இணைந்து முதன் முறையாக இரண்டு நாள் கூட்டம் ஒன்றை சென்னையில் நடத்தினர்.

இக் கூட்டத்தில் அகில இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இதன் தலைவராக மும்பையைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் அனில் மேத்தா தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக சன்னி ஜோசப், ஜி.சிவா, பொருளாளராக ராபர் ஆசிர்வாதம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை, கொல்கத்தா ஆகிய ஒளிப்பதிவாளர் சங்கங்களிலிருந்து 12 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. சிறப்பு வாய்ந்த இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒளிப்பதிவாளர்கள் எந்த மாநில உறுப்பினர்களாக இருந்தாலும், இந்தியாவிலுள்ள எந்த மாநிலங்களிலும், எந்த படங்களிலும் பணியாற்றலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

வெளிநாட்டு ஒளிப்பதிவாளர்கள் இந்தியாவில் பணியாற்ற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி அவர்கள் செயல்பட்டால்,  ‘அகில இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் கூட்டமைப்பு’ அந்த படப்பிடிப்பை தடை செய்யும். இவை உட்பட பல தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

பத்மஸ்ரீ விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு, தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் நினைவுப் பரிசு கொடுத்து இக்கூட்டமைப்பில் கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ஒளிப்பதிவாளர்கள் என்.கே.விஸ்வநாதன், ஜி.சிவா, கே.எஸ். செல்வராஜ், எம்.வி.பன்னீர் செல்வம், பாபு, ஆர்.டி.ராஜசேகர், ரத்தினவேலு, ரவிவர்மன், எம்.எஸ்.பிரபு, ரகுநாத ரெட்டி, நட்ராஜ், வேல்ராஜ், பிரியன், ஓம் பிரகாஷ், கே. ராஜு, பாபு சாய், சீனிவாசன், பி.எஸ். செல்வம், செல்லதுரை, மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Read Previous

ஒரே நாளில், ஒரே தயாரிப்பாளரின் 3 இசை வெளியீடு…

Read Next

கதை ‘லீக்’ ஆகவில்லை – ஏ.ஆர். முருகதாஸ் மறுப்பு