‘முத்த விவகாரம்’ – விஷால் – யுடிவி இடையே பிரச்சனை…

Naan Sigappu Manithan 0304_00002‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தில் விஷால் – லட்சுமி மேனன் முத்தக் காட்சியால் படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ் மட்டுமே கிடைத்தது.

இதனால் தமிழக அரசு அளிக்கும் 15 சதவீத வரிவிலக்கு படத்திற்கு கிடைக்காது.

அந்த வரிவிலக்கு கிடைத்தால் சில கோடி ரூபாய் மிச்சப்பட்டிருக்கும். அந்த நஷ்டத்தை சரி செய்ய விஷால் முன் வரவேண்டும் என யுடிவி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் விஷாலுக்கும், யுடிவிக்கும் பிரச்சனை ஆரம்பமாகியுள்ளதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுடிவி நிறுவனம் அந்த முத்தக் காட்சியை நீக்கி விட்டு படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வாங்கலாம் என்ற முடிவில் இருந்ததாகவும், ஆனால், விஷால்  ‘அந்த முத்தக்காட்சி படத்தில் ஒரு முக்கியமான காட்சி, அது இருந்தே ஆக வேண்டும்’ என பிடிவாதமாகக் கூறியதாகவும் தெரிகிறது.

ஒரே ஒரு காட்சிக்காக தற்போது சில கோடி ரூபாய்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதே என யுடிவி நிறுவனம் வருத்தமடைந்து, அந்த நஷ்டத்திற்கான தொகையை  விஷால் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனிடையே படம் வெளியாக  இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் அந்த பிரச்சனை முடிவுக்கு வருமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

முத்தப் பிரச்சனையாச்சே சத்தம் இல்லாம தீர்த்துக்க மாட்டாங்களா..?

Read Previous

ஆர்யாவுக்குக் கிடைத்த புது ஜோடி…?

Read Next

அஜித் – கௌதம் மேனன் படம் இன்று ஆரம்பம்…

Most Popular