அஜித் – கௌதம் மேனன் படம் இன்று ஆரம்பம்…

ajith 55 poojaஅஜித் – கௌதம் மேனன் முதன் முறையாக இணையும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

ஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை, வளசரவாக்கத்தில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கட்டியுள்ள சாய்பாபா கோயிலில் நடந்தது.

விழாவில் இயக்குனர் கௌதம் மேனன், தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், அவருடைய மகன் ஜோதி கிருஷ்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆனால், இந்த பூஜையில் படத்தின் நாயகனாக அஜித் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கலந்து கொண்டார்.

இப்படத்தில் அனுஷ்கா ஒரு நாயகியாக நடிப்பது உறுதி ஆகியுள்ளது. மற்றொரு நாயகியாக எமி ஜாக்சன் அல்லது த்ரிஷா ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பார் எனத் தெரிகிறது.

11ம் தேதி முதல் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

மற்ற விவரங்கள் விரைவில்…

Read Previous

‘முத்த விவகாரம்’ – விஷால் – யுடிவி இடையே பிரச்சனை…

Read Next

‘வட கறி’ படத்தில் சன்னி லியோன் – முதல் பார்வை