வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – விமர்சனம்

vallavanukku pullu aayudham தமிழ் சினிமாவில் நுழையும் இளைஞர்களுக்கெல்லாம், ஒரு காலத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதுதான் பெரிய லட்சியமாக இருக்கும். தட்டுத் தடுமாறி திரையுலகிற்குள் நுழைந்து அதன் பின் திறமையால் முன்னேறினாலும், நேரத்தால் முன்னேறினாலும் ஒரு சந்தர்ப்பத்தில் பலருக்கும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் துளியும் குறையவே குறையாது. சந்தானத்தைப் பொறுத்தவரையில், டிவி ஷோக்களில் லேசாகத் தலையைக் காட்டியவர், ஒரு சந்தர்ப்பத்தில் அங்கு முன்னணி நடிகராக வலம் ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக தன் திறமையை வளர்த்துக் கொண்டவர், சினிமாவிற்குள்ளும் நுழைந்தார். ஆரம்ப காலம் அப்படி ஒன்றும் சூப்பராக இல்லையென்றாலும், ஒரு கட்டத்தில் சந்தானம் இல்லாத படமா ? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அவரது முன்னேற்றம் அமைந்தது. இரண்டு, மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தாலும் முதன் முறையாக இந்த படத்தில் தனி ஹீரோவாக நடித்திருக்கிறார். ஒரு ஹீரோ செய்யும் அனைத்து வேலைகளையுமே செய்கிறார், காதல், காமெடி, சண்டை, சென்டிமென்ட் ….என எதையும் விட்டு வைக்கவில்லை. சென்னையில் வாட்டர் கேன் போட்டு பிழைப்பு நடத்துபவர் சந்தானம். ஊரில் அவருக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கிறது எனத் தெரிய வர அதை விற்று காசாக்க, ஊருக்கு கிளம்புகிறார். அங்கு பழைய பகையின் காரணமாக அவருடைய மாமாவும், அவருடைய மகன்களும் காத்திருக்கிறார்கள் என்பது தெரியாமலே போகிறார். ஊருக்குச் சென்றதும் யார் இவரைக் கொலை செய்ய காத்திருக்கிறார்களோ, அவர்களது வீட்டுக்குள்ளேயே தெரியாமல் போய் சிக்கிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. கதாநாயகனாக நடிப்பதால் தன்னை கொஞ்சம் ‘ஷைனிங்’ ஆக காட்டிக் கொண்டிருக்கிறார் சந்தானம். என்னதான் கிளாமரை ஏற்றினாலும், அவரது முகத்தில் ‘நல்லதம்பியும்,  பார்த்தசாரதியும்’ வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. இடைவேளைக்குப் பின் வரும் சாமார்த்திய ஹீரோவை விட, இடைவேளைக்கு முன் வரும் ‘சகல ரகளை’ ஹீரோதான் நம்மை அதிகம் கவர்கிறார். அதிலும், ராஜகுமாரனை சகட்டுமேனிக்கு ஓட்டுவதெல்லாம் பாவம் பாஸ்…அவரு…நாங்கள்லாம் தேவயானி ரசிகர்கள்… போதாததற்கு பவர் ஸ்டாரை வச்சே ‘போன பொங்கலுக்கு நானு, இந்த சம்மருக்கு அவரா…’ ங்கறதுலாம் சரவெடி…ஹீரோவா நடிங்க பாஸ், ஆனால், நீங்களும் ஹீரோவா போயிட்டால் எங்களை யாரு சிரிக்க வைக்கிறது. ஆஷ்னா சவேரி…இந்த டிரையினைப் பிடிக்க ‘ஹை ஸ்பீட்’ல ஓடி வர்ற ஹீரோயினை இன்னும் எத்தனை படத்துக்குதான் காட்டுவாங்களோ. வித்தியாசமா ‘பிளைட்’ பிடிக்க லேட்டா ஓடி வர்ற மாதிரி காட்டுனா எவ்வளவு நல்லா இருக்கும். மாமா மிர்ச்சி செந்தில் கூட நெருக்கமா பழகறாங்க, ஆனால் கடைசியில சந்தானத்தைக் காதலிக்கிறார்னு சொல்லிடறாங்க. அசப்புல, ஐஸ்வர்யா ராய் தங்கச்சி மாதிரியே இருக்காங்க. நிஜமாவே அப்படித்தானா, இல்லை நம்மை கண்ணை டெஸ்ட் பண்ணணுமான்னு தெரியலை. யாராச்சும் சரியா பார்த்து சொல்லுங்க. தங்கச்சி பையன் சந்தானத்தைப் போடத் துடிக்கிற மாமா நாகி நீடு, அவருடைய ரெண்டு பசங்க, அப்புறம் அடியாட்கள்னு அந்த வீட்டுக்குள்ள ஒரு கிராமமே சுத்திக்கிட்டிருக்கு. அவரைப் போடறதுக்கு அவ்வளவு கஷ்டப்படறாங்க.  இந்த சொந்த, பந்தப் பகைல கொஞ்சம் போரடிக்குது பாஸ். சித்தார்த் விபின் தான் படத்துக்கு இசையைமப்பாளர். ராஜகுமாரனோட நண்பனா நடிக்கவும் செஞ்சிருக்காரு. சித்தார்த் உங்களுக்கு நடிப்பு ரொம்ப நல்லா வருது. டிரையின்ல வர்ற காட்சியில மட்டும் ராஜகுமாரன் கொஞ்ச நேரம் எட்டிப் பார்க்கிறாரு. பாவம், சந்தானம் கிட்ட தலையைக் கொடுத்து மாட்டிக்கிட்டாரு போல. மிர்ச்சி செந்தில், விடிவி கணேஷ் மற்ற நடிகர்கள் பட்டியலில்… வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் – ஃபுல்லால் போனால் சரி…  

Read Previous

யாமிருக்க பயமே – விமர்சனம்

Read Next

சிம்புவுடன் எந்த உறவும் இல்லை…நயன்தாரா அறிவிப்பு…

Most Popular