காதல் செய்தியை மறுக்கிறார் ப்ரியாமணி…

priyamani 0107 newsநடிகை ப்ரியாமணிக்கும், கன்னட நடிகர் குமார் கோவிந்த்துக்கும் இடையே காதல் என தெலுங்கு மீடியாக்கள் செய்தியை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பின.

சில தினங்களுக்கு முன் ப்ரியாமணி அவருடைய சமூக வலைத்தளத்தில் குமார் கோவிந்துடன் உள்ள சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் தனக்கு முக்கியமான ஒன்று என்றும், அவற்றை பாதுகாத்து வைப்பேன் என்றும் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இருவரும் காதலிக்கிறார்கள் என செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த காதல் செய்தியை ப்ரியாமணி மறுத்துள்ளார்.

“குமார் என்னுடைய நண்பர். ‘டி பார் டான்ஸ்’ நிகழ்ச்சி மூலம் எனக்கு நண்பர் ஆனவர். அவ்வளவுதான், அதற்கு மேல் எதுவுமில்லை,” என தெரிவித்துள்ளார்.

‘டி பார் டான்ஸ்’ நிகழ்ச்சி ‘மழவில் மனோரமா’ மலையாளத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியின் நடுவராக ப்ரியா மணி இருக்கிறார்.

 

Read Previous

சமந்தா சம்பளம் 2 கோடியா ?

Read Next

விஜயகாந்த் மகன் பட இயக்குனர் ஓட்டம்…

Most Popular