‘கத்தி’ கதை பிரச்சனை…முடிவுக்கு வந்தது…

kaththi story issue newsஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கத்தி’. இந்தப் படத்தின் கதை தன்னுடையது என  கோபி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதற்கான தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்துள்ளது தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

“சில வாரங்களுக்கு முன் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் என தன்னை அழைத்துக் கொண்ட கோபி நைனார் என்பவர், ‘கத்தி’ படத்தின் கதையை தன்னிடமிருந்து ‘காப்பி’ அடித்ததாக வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை, சிட்டி சிவில் கோர்ட், ஏ.ஆர். முருகதாஸிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. கோபியின் கதைதான் அது என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை என வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விஜய்யின் ரசிகர்களுக்கு இந்தச் செய்தி கொண்டாட்டமான ஒன்றுதான், அதோடு ஏ.ஆர். முருகதாஸின் பிறந்த நாளன்று அந்த வழக்கின் தீர்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது,” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Previous

‘ஐ’ படப்பிடிப்பு முடிந்தது…

Read Next

‘லிங்கா’ படத்தில் பிரம்மானந்தம்…