‘ஐ’ படப்பிடிப்பு முடிந்தது…

i shooting last day photoஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி, சந்தானம், ராம் குமார் மற்றும் பலரது நடிப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் ‘ஐ’.

சமீபத்தில்தான் இந்தப் படத்தின் இசை வெளியீடு ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் கலந்து கொள்ள விமரிசையாக நடைபெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முழுதாக முடிந்துவிட்ட நிலையில் ஒரு பாடலை மட்டும் படமாக்காமலே இருந்தார்கள்.

சென்னை, பிரசாத் ஸ்டுடியோவில் இதற்காக பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று போடப்பட்டு அது பல மாதங்களாக அப்படியே கிடந்தது. சில பல பிரச்சனைகள்தான் அதற்குக் காரணம் என்றார்கள்.

இதனிடையே இசை வெளியீடு முடிந்ததும், அந்தப் பாடல் படமாக்கப்படும் என்று இயக்குனர் ஷங்கரே தெரிவித்தார். அதன்படி, இசை வெளியீடு நடைபெற்ற சில நாட்கள் கழித்து அப் பாடலின் படப்பிடிப்பு நடைபெற்றது. ‘லாடியோ….’ என்ற பாடலைத்தான் அந்த அரங்கில் படமாக்கினார்களாம். அதற்காக எமி ஜாக்சன் மற்றும் வெளிநாட்டு நடன மங்கைகள் கலந்து கொண்டு அந்தப் பாடலின் படப்பிடிப்புடன் ‘ஐ’ படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது.

படப்பிடிப்பு முடிந்த கடைசி நாளன்று இயக்குனர் ஷங்கர்,  விக்ரம், எமி ஜாக்சன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் மற்றும் அவரது குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடி, குழுவாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள்.

‘ஐ’ படத்தின் வெளியீட்டை இந்த உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

 

Read Previous

ஜீவா – விமர்சனம்

Read Next

‘கத்தி’ கதை பிரச்சனை…முடிவுக்கு வந்தது…

Most Popular