காயம் எதுவும் இல்லை – கமல்ஹாசன்…

Papanasam - Working Stills_00029கேரளாவில் நடைபெற்று வரும் ‘பாபநாசம்’ படப்பிடிப்பில் நேற்று கமல்ஹாசன் உடல் நிலை பாதிக்கப்பட்டதென செய்திகள் வெளியாகின. அதையடுத்து அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

“பல்வேறு வியாதிகளை என் மீது திணிப்பதற்குள் உண்மை என்னவென்பதை சொல்ல விரும்புகிறேன். படப்பிடிப்பில் எனக்கு காயம் ஏற்பட்டது, என்பதில் உண்மையில்லை. ரப்பரால் உருவாக்கப்பட்ட செயற்கையான மேக்கப் பொருள் ஒன்று எனது நாசிக்குள் சென்றுவிட்டது. அதை மருத்துவ மேற்பார்வையின் கீழ்தான் அகற்ற வேண்டும்.

ஸ்டண்ட் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போதுதான் அது நடந்தது, அப்போது எனது முகத்தில் செயற்கையாக காயங்கள் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், நான் மருத்துவமனைக்குச் சென்றது தவறான செய்தியாக உருவகம் பெற்று விட்டது,” என தெரிவித்துள்ளார்.

Read Previous

கத்தி – ‘ஆத்தி….’ பாடல் – வீடியோ…

Read Next

ஷங்கரைக் கவர்ந்த ‘கத்தி, மெட்ராஸ்’ பாடல்கள்…

Most Popular