‘கும்கி’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு அறிமுகமானார். தொடர்ந்து ‘இவன் வேற மாதிரி, அரிமா நம்பி’ என இரண்டு ஆக்ஷன் படங்களில் நாயகனாக நடித்தார்.
தற்போது எழில் இயக்கத்தில் ‘வெள்ளக்கார துரை’ படத்தில் கிராமத்து நாயகனாக, ஒரு நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, சூரி, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து, மிப்பு, பாவா லட்சுமணன், விட்டல் , வி.ஞானவேல், மகாநதி சங்கர், டாடி சரவணன், நான் கடவுள் ராஜேந்திரன், வனிதா, மதுமிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் எழில் கூறியதாவது,
“ஜனரஞ்சகமான படம் ‘வெள்ளக்கார துரை’. கிராமத்திலும் சரி, நகரத்திலும் சரி வேலை வெட்டி எதுக்கும் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் சிலரைப் பார்த்து வெள்ளகார துரை என்று சொல்வார்கள்.
அப்படியொரு ஜாலியான கதாபாத்திரம் தான் விக்ரம்பிரபுவுக்கு. விக்ரம்பிரபு வில்லேஜ் சப்ஜெக்டில் நடிக்கும் முதல் படம் இது.
ரியல் எஸ்டேட்டின் நல்லது, கெட்டதுகளை இதில் தொட்டிருக்கிறோம். எனது 9 வது படம் இது. ‘துள்ளாத மனமும் துள்ளும்’ முதல் சமீபத்திய ‘தேசிங்கு ராஜா’ வரை எல்லா படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கு.
இமான் கூட்டணியில் ‘மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா’ என எல்லா பாடல்களும் மெகா ஹிட். அதையெல்லாம் மிஞ்சும் பாடல்கள் இந்தப் படத்தில் இருக்கு.
ஆயிரம் படங்களுக்கு மேல் விநியோகத் துறையில் கொடிகட்டி பறக்கும் அன்பு செழியன் அண்ணனின் முதல் தயாரிப்பில் உருவான படத்தை நான் இயக்கி இருப்பது எனக்கு பெருமை தான்.
படப்பிடிப்புக்கு நிறையவே செலவு செய்து படம் பிரம்மாண்டமாக வர அன்பு சார் உதவினார். படப்பிடிப்பு சென்னை, தஞ்சை மாவட்டங்கள், மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றது,” என்றார் எழில்.
‘வெள்ளக்கார துரை’ இம்மாதம் 25 ஆம் தேதி வெளியாகிறது.