விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன், நேகா மற்றும் பலர் நடிக்கும் ‘சகாப்தம்’ படத்தின் சண்டைக் காட்சிகள் சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் படமாக்கப்பட்டது.
அங்குள்ள பட்டயா பீச்சில், அந்நாட்டின் பாரம்பரியம் மிக்க சாமுராய் வகை வாள்சண்டை வீராங்கனைகள் இருவரோடும், ஆப்ரிக்கன், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சவூதி அரேபியா, ஜப்பான் போன்ற நாடுகளைச் சேர்ந்த மார்ஷியல் ஆர்ட்ஸ், லெக் ஜெம்ப், பாக்சிங், ரிவர்ஸ் ஆக்ஷன், பாடி பிளாக்கிங் போன்ற கலைகளின் தலை சிறந்த கலைஞர்கள் பங்கேற்க சன்முகபண்டியன் மோதும் சண்டை காட்சி 6 நாட்கள் படமாக்கப்ட்டது.
60 லட்ச ரூபாய் செலவில் படமாக்கப்பட்ட இந்தச் சண்டைக் காட்சியில் 20 தாய்லாந்து ஸ்டண்ட் வீரர்களும் பங்கேற்றார்கள். இதில் நடிகர் ஜெகன், ரஞ்சித், சுரேஷ் ஆகியோரும் பங்கேற்றார்கள்.
அதிகமான கிரேன் ஷாட்டுகளைப் பயன்படுத்தி ஸ்டண்ட் மாஸ்டர் கேச்சா இந்தக் காட்சிகளை மிகச் சிறப்பாக எடுத்துள்ளாராம்.