‘சதுரங்க வேட்டை’ படத்திற்குப் பிறகு நடிகரும், இயக்குனருமான மனோபாலா தயாரிக்கும் படம் ‘பாம்பு சட்டை’.
இந்தப் படத்தில் நாயகனாக ‘ஜிகர்தண்டா’ படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹா நடிக்கிறார். இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராகப் பணி புரிந்த ஆடம் தாசன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற அஜீஸ் அசோக் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
ஆர். சரத்குமார், ஆர். ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தனது மனோபாலாஸ் பிக்சர் ஹவுஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் மனோபாலா.
இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் ஆரம்பமாகிறது…படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.