அமெரிக்காவில் ‘லிங்கா’…ரசிகர்கள் கொண்டாட்டம்…

lingaa in america
 தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் ‘லிங்கா’ கொண்டாட்டம் ஆஹா ஓஹோதான்! அதுவும் அமெரிக்காவில் ‘லிங்கா’வைக் கொண்டாடித் தீர்த்து விட்டார்கள் ரஜினியின் தீவிர ரசிகர்கள்.

சுமார் 5000 மைல் சுற்றளவில் இந்த முனையில் லிங்கா திரையிடப்பட்டபோது ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதே உற்சாகம் வேறொரு முனையிலும் அப்படியே இருந்ததாக கூறுகிறார் ஜாக் ராஜசேகர். பியூஷன் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர், லிங்காவின் அமெரிக்க விநியோகத்திலும் பெருமளவு பங்கேற்றவர்.

அதுமட்டுமல்ல, டிக்கெட் விலை 25 டாலர்களுக்கு விற்கப்பட்டதாம். நமது ஊர் பணத்திற்கு ரூபாய் 1500 மதிப்பு. இருந்தாலும் ரசிகர்கள் உற்சாகத்துடன் முண்டியடித்து தியேட்டருக்குள் வந்தார்களாம்.

கலிபோர்னியா ரஜினி பேன்ஸ் தியேட்டரில் பெரிய கேக் கொண்டு வந்து ரஜினி சார்பாக வெட்டி கொண்டாடியிருக்கிறார்கள். விர்ஜினியாவில் ஹேம்ப்டன் ரோட்ஸ் தமிழ்ச் சங்கம் லிங்காவின் சிறப்புக் காட்சியை தமிழர்களுக்காக ஏற்பாடு செய்திருக்கிறது.

Read Previous

‘உயிரே உயிரே’ படத்திற்கு ரஜினிகாந்த்தின் உதவி…

Read Next

பாபி சிம்ஹா நடிக்கும் ‘பாம்பு சட்டை…