‘நினைத்தாலே இனிக்கும்’ உட்பட பல படங்களில் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா.
மேலும் ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த பல படங்களிலும் ஜெயப்பிரதா நடித்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு ஜெயப்பிரதா அவர்கள் ரஜினிகாந்தை நட்பு ரீதியாக ‘லிங்கா’ படபிடிப்பின் போது சந்தித்துள்ளார். அப்போது அவருடைய தயாரிப்பில் மகன் சித்து நாயகனாக நடிக்கும் ‘உயிரே உயிரே’ படத்தின் டிரைலரைக் காண்பித்துள்ளார்.
அதை வெகுவாகப் பாரட்டிய ரஜினிகாந்த் அவருடைய ‘உயிரே உயிரே’ படத்தின் டிரைலரை ‘லிங்கா’ வெளியாகும் திரையரங்குகளில் இணைக்குமாறு தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் பெருந்தன்மையைக் கண்டு மகிழ்ச்சியுற்ற நடிகை ஜெயப்பிரதா அவருக்கு தனது நன்றியை தெரிவித்தார்,
உயிரே உயிரே சித்து கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். A.R. ராஜசேகர் இப்படத்தை இயக்கத்தில் அனுப் ரூபன்ஸ் இசையமைக்கிறார்.