‘மைனா, கும்கி’யை மிஞ்சும் ‘கயல்’…

Kayal news 20th decஎத்தனையோ காதல் படங்கள் வந்தாலும் ஒரு யதார்த்தக் காதலைச் சொல்லி ‘மைனா’ படம் மூலம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரபு சாலமன்.

அதைத் தொடர்ந்து ‘கும்கி’ படத்தையும் மலைப் பிரதேசப் பின்னணியில் மீண்டும் ஒரு யதார்த்தமான படத்தைக் கொடுத்து நிறைவான படத்தைக் கொடுக்கும் தரமான இயக்குனர் என்ற பெயரைப் பெற்றார்.

அவரது இயக்கத்தில் தற்போது உருவாகி அடுத்த வாரம் வெளிவர இருக்கும் ‘கயல்’ படமும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபு சாலமன் நிச்சயம் ‘ஹாட்ரிக்’ சாதனை புரிவார் என்ற நம்பிக்கையில் இந்தப் படத்தை 600க்கும் மேற்பட்ட திரையரைங்குளில் வெளியிடுகிறார்கள்.

‘மைனா, கும்கி’ படங்களை விட இந்தப் படத்தை கதைக்குத் தேவையான விதத்தில் அதிக பொருட்செலவில் எடுத்திருக்கிறார்கள். படத்தில் இடம் பெறும் ஒரு முக்கியமான சுனாமி காட்சியை எந்த மினியேச்சரும் இல்லாமல் நிஜ தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியிருக்கிறார்கள்.

படத்தில் சில நிமிடங்களே இடம் பெறும் அந்தக் காட்சியின் முக்கியத்துவத்தைக் கருதி, அந்த அளவிற்கு செலவு செய்திருக்கிறார்கள்.

திரைக்கு வருவதற்கு முன்பே படத்தைப் பற்றிய பாசிட்டிவ் விஷயங்கள் திரையுலகம் முழுவதும் பரவியுள்ளதால் பிரபு சாலமனின் முந்தைய படங்களான ‘மைனா, கும்கி’ ஆகிய படங்களை விட ‘கயல்’ படத்திற்கு வரவேற்பு அதிகம் இருக்கிறதாம்.

அறிமுக நாயகன் சந்திரன், ஆனந்தி, வின்சென்ட் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இமான் இசையில் கயல் படத்தின் அனைத்துப் பாடல்களுமே ஏற்கெனவே சூப்பர் ஹிட்டாகி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும், வெளியீட்டிலும் வருடம் படங்கள் தொடர்ச்சியான வெற்றியைப் பெற்று வருகின்றன, அந்த ராசி ‘கயல்’ படத்திலும் தொடரும் என்கிறார் தயாரிப்பாளர் பி. மதன்.

Read Previous

‘லிங்கா‘ விவகாரம் – வேந்தர் மூவீஸ் அறிவிப்பு…

Read Next

பிசாசு – விமர்சனம்