2014ம் ஆண்டு பேய்ப் படங்களின் ஆண்டாக இருந்தது. அந்த ஆண்டில் வெளிவந்த பல பேய்ப் படங்கள் வெற்றிப் படங்களாகவும் அமைந்தன.
“யாமிருக்க பயமே, அரண்மனை, ர, பிசாசு” இப்படி பல படங்கள் ரசனையான படங்களகாவும், கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் படங்களாகவும் அமைந்தன.
கடந்த ஆண்டில் “அரண்மனை, பிசாசு” ஆகிய பேய்ப் படங்களை வாங்கி வெளியிட்ட ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், மோகனா மூவீஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘டிமான்ட்டி காலனி’ என்ற படத்தைத் தயாரித்துள்ளது.
புதியவர்களான அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கெபா ஜெர்மியா இசையமைப்பில், அருள் நிதி நாயகனாக நடிக்கிறார்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடும் படங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைந்து வருகின்றன. அந்த ராசி இந்தப் படத்திலும் தொடரும் என்றே தெரிகிறது. அந்த அளவிற்கு படத்தின் டிரைலர் மிரட்டலாக அமைந்துள்ளது.
டிமான்ட்டி காலனி – டீசர்…
http://youtu.be/gxEOs-WNKZ0