‘ஐ’ – 1000 கோடி வசூலிக்கும் – தயாரிப்பாளர்

i wrap up photo‘ஐ’ படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக வி. ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். பல வெற்றிப் படங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ள ஆஸ்கர் ரவிச்சந்திரன் சுமார் 120 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ள ‘ஐ’ படம் 1000 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

“ஐ’ படம் பிரமிப்பூட்டும்விதத்திலும், ஆச்சரியப்படும் விதத்திலும் இருக்கும். முதலில் படம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடும் வகையில் இருந்தது.

அதன் பின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி 3 நிமிடம் அதிகரிக்கப்பட்டு தற்போது படம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடும் அளவிற்கு வைக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு யு-ஏ சான்றிதழ்தான் வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படம் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளைத் தவிர உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது. பாகிஸ்தான், உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிலும் நாளை வெளியாகிறது.

சீனாவில் அடுத்த மாதம் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அந்தச் சமயத்தில் அங்கு வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறோம். இந்தப் படத்தின் 40 சதவீத காட்சிகள் சீனாவில்தான் படமாக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மொத்தமாக இந்தப் படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்,” என தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Read Previous

அமோக அட்வான்ஸ் புக்கிங்-ல் ‘ஐ’…

Read Next

டிமான்ட்டி காலனி – அடுத்த மிரட்டலான பேய்ப் படம் ரெடி…

Most Popular