இரு ஏமாற்றங்களுக்குப் பிறகு கௌதம் மேனன்…

yohan-athyayam-ondru-duruva-natchathiramகௌதம் மேனன், ‘மின்னலே’ படத்தின் மூலம் ஹாரிஸ் ஜெயராஜை அறிமுகப்படுத்தி சூப்பர் ஹிட் பாடல்ளுடன் ரசிகர்களை வசீகரப்படுத்தியவர்.

தொடர்ந்து “காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா” என தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க சில படங்களைக் கொடுத்தவர்.

அடுத்து “நடு நிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம்” ஆகிய படங்கள் அவருடைய பெரையக் கொஞ்சம் உரசிப் பார்த்தன.

அந்த இரண்டு படங்களின் தோல்விகளுக்குப் பிறகு இரண்டு ஹீரோக்களால் கௌதம் மேனனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒன்று விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’, மற்றொன்று சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘துருவ நட்சத்திரம்’.

விஜய் படம் விளம்பரத்துடன் நின்று போனது, சூர்யா படம் பூஜை வரை வந்து நின்று போனது. இருந்தாலும் அந்த இரண்டு ஏமாற்றங்களால் அவர் துவண்டு விடாமல், அஜித்தால் ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் எழுந்து வந்திருக்கிறார்.

தோல்விக்குப் பிறகு கிடைக்கப் போகும் வெற்றியை ருசிப்பதில்தான் ஆனந்தம் அதிகம்….அது கௌதம் மேனனுக்குக் கிடைக்கட்டும்.

Read Previous

‘என்னை அறிந்தால்’ – 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ்…

Read Next

புது யுகம் – தைப்பூசத் திருவிழா, சிறப்பு ஒளிபரப்பு…

Most Popular