‘என்னை அறிந்தால்’ – 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ்…

Yennai Arindhaal - Gallery 2_00026அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் பிப்ரவரி 5ம் தேதியன்று 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 500 திரையரங்குகளிலும், கேரளாவில் 200 திரையரங்குகளிலும் அமரிக்காவில் 100 திரையரங்குகளிலும், கர்நாடகா, மற்றும் இதர நாடுகளில் 200 க்கும் மேற்பட்ட திரையரங்குகிளலும் வெளியகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் மட்டும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

அஜித்தின் முந்தைய படங்களான ‘வீரம், ஆரம்பம்’ ஆகிய படங்களை விட இந்தப் படத்திற்கு அதிக வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.

தற்போதைக்கு 1000 திரையரங்குகள் என்று சொல்லப்பட்டாலும், மேலும் 100 அல்லது 200 திரையரங்குகள் அதிகமாகவும் வாய்ப்பிருக்கிறது.

கௌதம் மேனன் – அஜித் முதன் முறையாக இணையும் படம் என்பது படத்திற்கு பிளஸ் பாயின்டாக அமைந்துள்ளது.

Read Previous

‘உத்தம வில்லன்’ மார்ச் 1 இசை வெளியீடு…

Read Next

இரு ஏமாற்றங்களுக்குப் பிறகு கௌதம் மேனன்…