‘உத்தம வில்லன்’ மார்ச் 1 இசை வெளியீடு…

uttama villain audio launch newsரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ படத்தின் இசை மார்ச் 1ம் தேதி வெளியிடப்படுகிறது.

கமல்ஹாசன் தற்போது இந்தப் படத்துடன் சேர்த்து ‘பாபநாசம்’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். ‘விஸ்வரூபம் 2’ படத்திற்காக இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம்.

அதனால் முதலில் ‘உத்தம வில்லன்’ படம்தான் திரைக்கு வர உள்ளது. அநேகமாக ஏப்ரல் 2ம் தேதி படம் திரைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. மே மாதம் அல்லது ஜுன் மாதத்தில் ‘பாபநாசம்’ படம் திரைக்கு வரலாம்.

ரமேஷ் அரவிந்த் தமிழில் இயக்குனராக அறிமுகமாகும் ‘உத்தம வில்லன்’ படம் வித்தியாசமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

‘பெங்களூர் டேய்ஸ்’ ரீமேக், சித்தார்த் – சமந்தா விலகல்…

Read Next

‘என்னை அறிந்தால்’ – 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ்…