புது யுகம் – தைப்பூசத் திருவிழா, சிறப்பு ஒளிபரப்பு…

malaysia batu caves murugan templeதைப் பூசம்….உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ்க் கடவுள் முருகனை வழிபடும் தினம். முழு நிலவு, பூச நட்சத்திரத்துக்கு வரும் இந்த சிறப்பான தினத்தில் முருகன் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகளும், தீபாராதனைகளும் நடக்கும்.

குறிப்பாக மலேசியாவில் பத்துமலை, பினாங்கு, ஈப்போ மற்றும் தமிழகத்தில் திருத்தணி, விராலிமலை, மருதமலை, பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட முக்கிய திருத்தலங்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

அக்கோவில்களுக்கு நேரடியாக செல்ல இயலாத பக்தர்கள் தங்கள் இல்லத்திலிருந்தபடியே இந்த வழிபாடுகளை கண்டுகளிப்பதற்காக புதுயுகம் தொலைக்காட்சி சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. தமிழகத்திலும் மலேசியாவிலும் உள்ள முக்கிய முருகன் கோவில்களில் நடக்கும் பூஜைகளை தனது நேயர்களுக்காக வழங்குகிறது.

தை பூசத் திருவிழா, சிறப்பு ஒளிபரப்பு இன்று மாலை 5 .00 மணி முதல் 6.30 மணி வரை புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

Read Previous

இரு ஏமாற்றங்களுக்குப் பிறகு கௌதம் மேனன்…

Read Next

மார்ச்சில் வருகிறது ‘வாலு’…