மார்ச்சில் வருகிறது ‘வாலு’…

vaalu release newsநிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள ‘வாலு’ படம் மார்ச் மாதம் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வாலு’ படத்தின் புதிய டீசர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. “நயன்தாராவும் வேணாம்…அந்த ஆன்ட்ரியாவும் வேணாம்…” என்ற பாடலின் டீசர் அது.

டீசரின் முடிவில் மார்ச் 27ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். இதற்கு முன் டிசம்பர் 24ம் தேதியன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் பிப்ரவரி 3 வெளியாகும் என்று தேதியை மாற்றி வைத்துள்ளார்கள்.

முன்னர் அறிவித்தபடி இன்று வெளியாகாமல் தற்போது ‘மார்ச் 27ம்’ தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

மார்ச் மாதத்திலாவது மிடுக்குடன் வந்து விடுமா ‘வாலு’ என்பது அப்போதுதான் தெரிய வரும்…

Read Previous

புது யுகம் – தைப்பூசத் திருவிழா, சிறப்பு ஒளிபரப்பு…

Read Next

‘புறம்போக்கு’ டிரைலர் இந்த வாரம்…