‘புறம்போக்கு’ டிரைலர் இந்த வாரம்…

purampokku trailer newsயு டிவி தயாரிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வர்ஷன் இசையமைப்பில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘புறம்போக்கு’ படத்தின் டிரைலர் இந்த வாரம் வெளியிடப்பட உள்ளது.

தமிழ்த் திரையுலகில் அபூர்வமாகக் காணப்படும் ‘மல்டி ஸ்டார்’ படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு குலுமனாலியில் ஆரம்பமாகி தொடர்ந்து ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

‘பேராண்மை’ படத்திற்குப் பிறகு ஜனநாதன் இயக்கியிருக்கும் இந்தப் படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகவும் அமைந்துள்ளது.

கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருகிறது.

Read Previous

மார்ச்சில் வருகிறது ‘வாலு’…

Read Next

‘இது நம்ம ஆளு’ – சித்திரை வெளியீடு…