ரீவ்ஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஸ்ரீதக்ஷா இன்னவேஷன்ஸ் தயாரிப்பில் ராம்கி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் பைசல் இசையமைப்பில் யுவன், ஸ்ரீராம், ரக்ஷா, மனிஷாஜித் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கமர கட்டு’.
இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து படமும் தயாராகி விரைவில் சென்சாருக்கு அனுப்ப்பட உள்ளது. மே மாதம் இப்படத்தை வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளார்கள்.
இப்படம் குறித்து படத்தின் இயக்குனர் ராம்கி கூறியதாவது,
“படத்துல முக்கிய கேரக்டர்ல நடிச்சிருக்கிறவங்க ஸ்கூல் யூனிபார்ம் போட்டிருக்கிறதால பசங்களை வச்சி ஒரு காதல் கதை ஏதாச்சும் கொடுத்திருப்பனோன்னு சிலர் பயப்படறாங்க. ஆனால், இது அப்படிப்பட்ட கதை அல்ல. தப்பான படத்தை நானும் செய்ய மாட்டேன்.
இது ஒரு ஹாரர் கதை, படத்துல பேய் காட்டறதுன்னாக் கூட பயப்படற மாதிரிலாம் காட்டலை. அதையே ரொம்ப புதுசா காட்டியிருக்கிறோம். சித்தர், ஹாரர், மாணவர்கள் என மாறுபட்ட, ஆனால் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருக்கிற மாதிரியான திரைக்கதை படத்துல இருக்கு.
நம்ம வாழ்க்கையில நடந்த பல நல்ல விஷயங்களை நாம ஷேர் பண்ணலாம். பள்ளிப் படிப்பை முடிஞ்சதும் எல்லாருக்கும் ஒரு தடுமாற்றம் வரும். அப்ப நமக்குள்ள சில மனமாற்றங்களும் வரும். நாம எடுக்கற முடிவு அப்ப கரெக்டா தெரியும், ஆனால் அது சில சமயங்கள்ல தப்பா கொண்டு போய்தான் விடும். இது எல்லாருடைய வாழ்க்கையிலயும் நடந்திருக்கு. அதை நான் கேட்ட, அனுபவிச்ச சில விஷயங்களைச் சேர்த்து சுவாரசியமா இந்தப் படத்தைக் கொடுத்திருக்கேன்.
படத்தை ‘கமர கட்டு’ங்கற பெயருக்கேத்தபடி ஸ்வீட்டாவே முடிச்சிருக்கேன். படம் நல்லா வந்திருக்கு, தயாரிப்பாளர் ரொம்ப மகிழ்ச்சியா இருக்காரு, வியாபார வரவேற்பும் நல்லா இருக்கு,” என நல்ல படத்தை எடுத்திருக்கும் நம்பிக்கையுடன் பேசுகிறார் இயக்குனர்.