‘சீன்’ டிரைலர் வெளியீடு

சூர்யா நடிப்பில், ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள ‘சீன்’ (Scene) திரைப்படத்தை ஜீத்து மாதவன் இயக்கியுள்ளார். சூர்யாவுடன் நஸ்ரியா நசிம், நஸ்லென், லால், ஆனந்த்ராஜ், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன், நகைச்சுவை, கிரைம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்துடன் வெளியாகியுள்ள இந்த டிரைலர், சூர்யா ஏற்றுள்ள இன்பராஜ் கதாபாத்திரத்தின் வித்தியாசமான அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது.

‘ரொமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய மலையாளப் படங்களை இயக்கிய ஜீத்து மாதவன் தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்திற்கு வினீத் அகஸ்தியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜ்மல் சாபு படத்தொகுப்பையும், அஷ்வினி காலே தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர். சண்டைக் காட்சிகளை சேத்தன் டி’சௌசா வடிவமைத்துள்ளார். தமிழ்ப் படத்திற்கான வசனங்களை திராவிட் செல்வம் எழுதியுள்ளார்.

சூர்யாவின் வித்தியாசமான காவல் அதிகாரி கதாபாத்திரம், நஸ்ரியாவின் நடிப்பு, நஸ்லெனின் எதிர்மறைக் கதாபாத்திரம் எனப் பல அம்சங்களைக் கொண்டுள்ள ‘சீன்’ திரைப்படம், வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Read Previous

சிங்காரம் – விமர்சனம்

Read Next

‘ஜான் டோ’ நவம்பர் 13 வெளியீடு