போடா போடி – விமர்சனம்

தயாரிப்பு – நேமிசந்த் ஜபக், வி. ஹிதேஷ் ஜபக், ஜெமினி பிலிம் சர்க்யூட்

இயக்கம் – விக்னேஷ் சிவன்

இசை – தரண் குமார்

ஒளிப்பதிவு – டங்கன் டெல்ஃபோர்ட்

படத்தொகுப்பு – ஆண்டனி

நடிப்பு – எஸ்டிஆர், வரு சரத்குமார், ஷோபனா, விடிவி கணேஷ்.

வெளியான தேதி – 13 நவம்பர் 2012

ரு காதலன், ஒரு காதலி…..இவர்களிருவம் சம்பந்தப்பட்ட இன்னும் எத்தனை விதமான காதல் கதைகளில் சிம்பு நடிப்பார் எனத் தெரியவில்லை.

காதல் பிறகு மோதல், பார்த்துப் பழகிய  விஷயமாகத் தெரிந்தாலும் அதை முடிந்த வரை வித்தியாசப்படுத்திக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விக்னேஷ் சிவன்.

லண்டனில் சித்தப்பாவுடன் இருக்கிறார் சிம்பு (எஸ்டிஆர்). இவருக்கும் நடனத்தில் பெரிய பெயர் வாங்க வேண்டு துடிக்கும் வரு சரத்குமாருக்கும் (படத்தில் இப்படித்தான் பெயர் போடுகிறார்கள்) காதல். லண்டனில் இருந்தாலும் தமிழ் கலாச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர் சிம்பு. ஆனால், இந்தக் கால இளைஞியாக ( ! ), ஆண்களுடனும் சகஜமாகப் பழகுபவர் வரு. இவர்களிருவரும் காதலித்து, திருமணம் புரிந்து, குழந்தை பெற்று, பிறகு பிரிந்து, பிறகு இணைவது என 7 எபிசோடுகளாக வருவதுதான் படத்தின் கதை.

வழக்கமான சிம்பு கொஞ்சம், மெச்சூர்டான சிம்பு கொஞ்சம், என கலந்து கட்டிய காதல் நாயகனாக நடித்திருக்கிறார் சிம்பு.  வருவைப் பார்த்து காதல் கொள்வது, அவருடைய நடவடிக்கைகள் பிடிக்காமல் கோபித்துக் கொள்வது, காதல், மோதல், ஊடல் என அவருடைய ‘ஏரியா’வில் வழக்கம் போலவே விளையாடியிருக்கிறார். ஆனாலும், வருவைப் பிரிந்திருக்கும் போது, ஷோபனாவிடம் வந்து பேசும் காட்சியில் சென்டிமென்ட்டை பிழிந்து விட்டார். அங்கே டி.ஆரும். கொஞ்சம் எட்டிப் பார்க்கிறார்.

அறிமுகம் வரு சரத்குமார். லுக், பேச்சு, நடிப்பு, ஸ்டைல் என அனைத்திலும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருக்கும் அவருடைய பேச்சு தனி ஸ்டைல்தான். வெல்கம்..டூ தமிழ் சினிமா…இனி தொடர்ந்து பல படங்களில் இவரை பார்க்கலாம். குட் சாய்ஸ்…குட் ஒர்க்…

அப்பப்ப வந்து சிரிக்க வைக்கிறார் விடிவி கணேஷ். ஷோபனா மீது கேமராமேனுக்கு என்ன கோபமோ ? . மற்ற காட்சிகளில் கலக்கியிருக்கிறார் கேமரா மேன்.

தரண் குமார் இசையில் ‘கலந்து கட்டிய’ பாடல்கள்.

2012ல் காதல் கதைகள் இப்படித்தான் இருக்கும் என நினைப்பவர்கள் 40ஐ தொட்டவர்கள். புது ஸ்டைல் என சொல்பவர்கள் 18ஐ கடந்தவர்கள். இப்படியெல்லாம் கூடவா காதல் கதை எடுப்பார்கள் என நினைப்பவர்கள் 50ஐ தொடுபவர்கள்.

காலத்துக்கேத்த மாதிரி நம்ம டேஸ்ட்டையும் நாம மாத்திக்க வேண்டியதுதான்…

போடா போடி – போங்க…பாருங்க…

Read Previous

‘மும்பை’யோட ராசி நல்ல ராசி…

Read Next

‘இவன் வேற மாதிரி’ – ஹீரோயின் ரெடி

Most Popular