‘இவன் வேற மாதிரி’ – ஹீரோயின் ரெடி

     ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் ‘கும்கி’ நாயகன் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் படம் ‘இவன் வேற மாதிரி’. இந்த படத்திற்கான நாயகி தேர்வு கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்தது.

தற்போது , ‘சுடிகாடு’ தெலுங்குப் படத்தில் நாயகியாக நடித்த ‘மோனல் கஜ்ஜார்’ஐ நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் ‘வானவராயனும் வல்லவராயனும்’ என்ற தமிழ்ப் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

விக்ரம் பிரபு நல்ல உயரமானவர் என்பதால் அவருக்குப் பொருத்தமான உயரம் அதிகமான நாயகியாக ஒருவரை தேடிக் கொண்டிருந்தார்கள். இப்போது பொருத்தமான நாயகி கிடைத்து விட்டார் என யூனிட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

Read Previous

போடா போடி – விமர்சனம்

Read Next

நவ.24ல் அலெக்ஸ் பாண்டியன் – இசை வெளியீடு