நவ.24ல் அலெக்ஸ் பாண்டியன் – இசை வெளியீடு

    ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடிக்கும் படம் ‘அலெக்ஸ் பாண்டியன்’.

பொங்கல் வெளியீடாக வெளிவர இருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு வரும் நவம்பர் 24ம் தேதி சென்னை இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற இருக்கிறது.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் வழக்கம் போலவே மேடையில் இரண்டு பாடல்களுக்கு நடனமாட இருக்கிறார்.

ஆக்ஷன் படமான இந்தப் படத்திலும் ஒரு அதிரடியான இசையை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

Read Previous

‘இவன் வேற மாதிரி’ – ஹீரோயின் ரெடி

Read Next

விபத்தில் சிக்கிய விவேக்