முக்தா சீனிவாசன் வழங்க, மாயா கிரியேஷன்ஸ் சார்பாக சீனிவாசன் தயாரிக்கும் படம் ‘பத்தாயிரம் கோடி’. சீனிவாசன் சுந்தர் இயக்கும் இப்படத்தில் துருவ், மாடல் ஷா நாயகன், நாயகியாக நடிக்க , முக்கிய கதாபாத்திரததில் விவேக் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பூந்தமல்லி அருகே கரையான்சாவடி என்ற இடத்தில் நடைபெற்றறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விவேக்குக்கு விபத்து ஏற்பட்டது.
ஒரு பெண்ணை பச்சைக் குதிரை தாண்டுவது போன்ற காட்சி படமாக்கப்பட்ட போது தவறி விழுந்தார் விவேக். அதனால் வலது காலில் மூட்டு விலகி சிறிது முறிவும் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடனடியாக மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர்.
சிகிச்சை முடிந்த ஓய்வில் இருக்கும் விவேக் குணமடைந்த பின் ‘பத்தாயிரம் கோடி’ படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.