‘துப்பாக்கி’ தெலுங்கிலும் ‘ஹிட்’

   தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் வெளிவந்த ‘துப்பாக்கி’ படம் ‘சூப்பர் ஹிட்’ படங்களின் வரிசையில் இடம் பெற்று விட்டது.

சென்னையில் உள்ள திரையரங்குகளில் இன்னும் ஒரு வாரத்திற்கு டிக்கட்டுகள் ‘புக்’ செய்யப்பட்டுவிட்டன.

ஆந்திராவிலும் வெளியிடப்பட்ட துப்பாக்கி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக ‘தெலுங்கு’ தேசத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் விஜய் நடித்த ‘நண்பன்’ படம் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், பெரிய அளவில் அந்த படம் ஓடவில்லை.

ஆனால் , தற்போது, ‘துப்பாக்கி’ படத்திற்கு விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும், ஒரு தமிழ் ஹீரோ ‘ஆந்திர மக்களின்’ மனதில் இடம் பிடித்து விட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.

Read Previous

விபத்தில் சிக்கிய விவேக்

Read Next

‘கஹானி’ ரீமேக்கில் அனுஷ்கா