ஹிந்தியில் வெளியாக நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற படம் வித்யா பாலன் நடித்த ‘கஹானி’.
இப்படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் படமாகவுள்ளது. தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முலா இப்படத்தை இயக்க உள்ளார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு கர்ப்பிணி மனைவி காணாமல் போன அவளது கணவனை தேடுவதுதான் படத்தின் கதை. ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்திற்குப் பிறகு இந்த படத்தில் நடித்து வித்யா பாலன் அவரது திறமையை மேலும் நிரூபித்தார்.
வித்யா பாலன் நடித்த இந்த கதாபாத்திரத்தில்தான் அனுஷ்கா நடிக்க இருக்கிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்றாலே பல இயக்குனர்களுக்கு அனுஷ்காதான் ஞாபகத்திற்கு வருகிறார். அருந்ததி, தெய்வத் திருமகள் போன்ற படங்கள் அவரது நடிப்பிற்கு சிறந்த உதாரணம்.
இப்போது ‘கஹானி’ ரீமேக்கும் அவருக்கு நல்ல படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.