‘மும்பை’யோட ராசி நல்ல ராசி…

   ன்னும் கொஞ்ச நாளைக்கு தமிழ் சினிமாவில் ‘மும்பை’ வாசம் அதிகமாகவே வீசும் என எதிர்பார்க்கலாம். காரணம், மும்பையை கதைக் களமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் தரும் வெற்றிதான்.

அஜித்துக்கு ‘மங்காத்தா’ வும், தற்போது விஜய்க்கு ‘துப்பாக்கி’ யும் அவரவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையைத் தந்துள்ள முக்கிய படங்களாக இடம் பெற்று விட்டன. ‘மங்காத்தா’, ‘துப்பாக்கி’ இரண்டு படங்களின் கதைகளுமே ‘மும்பை’யில் நடைபெறுவதாகவே படங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ‘மும்பை’ ராசி இவர்களிருக்கும் ‘சக்சஸ்’ சென்டிமென்டாக அமைந்து விட்டது. இனி திருப்புமுனையை, பிரம்மாண்ட வெற்றியை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் ‘மும்பை’யை நோக்கி படை (படம்) எடுக்கலாம்…

ரஜினிக்கு ‘பாட்ஷா’, கமலுக்கு ‘நாயகன்’ சமீபத்தில் கார்த்திக்கு ‘பையா’, என   ‘மும்பை’ ஒரு முக்கிய களமாக இடம் பெற்ற படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன.

சபாஷ், ‘மதுரை’க்கு இனி சரியான போட்டி ‘மும்பை’ தான்…

Read Previous

‘மீண்டும்’ தமிழ் பேசும் த்ரிஷா…

Read Next

போடா போடி – விமர்சனம்

Most Popular