விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘சூப்பர் சிங்கர் சீசன் 9’க்கான இறுதிப் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது.
2006ம் ஆண்டு ஆரம்பமான இந்நிகழ்ச்சி 9 சீசன்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த 9வது சீசனுக்கான இறுதிப் போட்டியில் அருணா, அபிஜித், ப்ரியா ஜெர்சன், பிரசன்னா, பூஜா ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களில் பலத்த போட்டிக்குப் பிறகு அருணா வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் 10 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பெற்ற ப்ரியா ஜெர்சன் 10 லட்சம் ரொக்கப் பரிசையும், மூன்றாம் இடத்தைப் பெற்ற பிரசன்னா 5 லட்சம் ரொக்கப் பரிசையும் பெற்றார்கள்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இறுதிப் போட்டியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
9வது சீசனின் நடுவர்களான அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், ஸ்வேதா மோகன், பென்னி தயாள் மற்றும் சித்ரா, புஷ்பவனம் குப்புசாமி, ஆண்டனி தாஸ், ஆனந்த் வைத்தியநாதன், சூப்பர் சிங்கர் சீசனின் முந்தைய போட்டியாளர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டனர்.