விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’.
பாடுவதில் அதிக ஆசை கொண்டவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக இதுவரை 7 சீசன்களை இந்த நிகழ்ச்சி கடந்திருக்கிறது.
அடுத்து 8வது சீசனை வரும் ஜனவரி 24 முதல் ஆரம்பிக்க உள்ளார்கள். அன்றைய தினம் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை ஒன்பது மணி நேர நிகழ்ச்சியாக தமிழ்த் தொலைக்காட்சிகளின் வரலாற்றில் முதல்முறையாக ஒளிபரப்பாக உள்ளது.
சூப்பர் சிங்கர் சீசன் 8 அறிமுக நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ள அந்நிகழ்ச்சியில் ஹரிஹரன், சங்கர்மஹாதேவன், விஜய் பிரகாஷ், விஜய் யேசுதாஸ், எஸ்பிபி சரண், கார்த்திக், சித் ஸ்ரீராம், சைந்தவி, ஷாஷா திரிபாதி, கிரேஸ் கருணாஸ், சின்னபொண்ணு, ஆண்டனி தாசன், கானா பாலா என பிரபல பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள்.
அதற்கடுத்த வாரங்களில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
இந்த சீனின் நடுவர்களாக அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள் மற்றும் கல்பனா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
நிகழ்ச்சியை பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்குகிறார்கள்.