கோவையில் சூப்பர் சிங்கர் 7 இறுதிப் போட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி, வரும் நவம்பர் 10ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, கோயம்பத்தூர் கொடிசியா வர்த்தக வளாகத்தில்  நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் மதியம் 3.30 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பாகும்.

கடந்த சில மாதங்களாக பல பாடகர்கள், இசைக் கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரிட்சைகளையும் கடந்து வந்து இறுதிப் போட்டிக்கு புன்யா, விவேக், சாம் விஷால், கவுதம், மற்றும் முருகன் ஆகியோர் தேர்வாகி உள்ளார்கள்

இந்த சீசனின் நடுவர்களாக பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், ஸ்வேதா  மோகன் ஆகியோர்  இந்த போட்டியாளர்களை ஊக்கப்படுத்தியும், உற்சாகப்படுத்தியும் வந்தனர்.

மேலும் இந்த சீசனின் மத்த டாப் போட்டியாளர்கள், சூப்பர்  சிங்கர் பிரபலங்கள், அற்புதமான நடுவர்கள் என பலர் இறுதிப் போட்டியில் இசை விருந்தளிக்க உள்ளார்கள்.

பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இறுதிப் போட்டியில்  இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொள்கிறார் .  மேலும் சூப்பர் சிங்கர் 7 ல் வெற்றி பெறும்  போட்டியாளர் இவரின் இசையமைப்பில் பாடும் வாய்ப்பைப் பெற உள்ளார். அதோடு அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு வீடும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Read Previous

‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல்ஹாசன்

Read Next

கமல்ஹாசன் நடித்த ‘ஹே ராம்’ டிரைலர் – Recuts

Most Popular