ஸ்டார் விஜய் டிவியில் புத்தம் புதிய நகைச்சுவை நிகழ்ச்சியாக ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ என்ற நிகழ்ச்சி ஜூன் 27 முதல் ஆரம்பமாகி உள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
இந்த நிகழ்ச்சியில் 10 நகைச்சுவை ஜோடிகள் பங்கேற்கிறார்கள். புகழ் – அர்ச்சனா, பாலா – ரித்திகா, ராமர் – தீபா, நிஷா – ராஜு, டி.எஸ்.கே – சுனிதா, யோகி – ஷப்னம், சதீஷ் – காயத்ரி, வினோத்பாபு – பிரணிகா, ஜெயச்சந்திரன் – அர்ச்சனா, ராஜவேலு – தர்ஷா குப்தா ஆகியோர் தான் அந்த ஜோடிகள்.
ஒவ்வொரு வாரமும் பல்வேறு சுற்றுகள் மூலம் போட்டியிட்டு ரொக்கப் பரிசை வெல்வார்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு சிறந்த ‘கலக்கல்’ ஜோடி தேர்ந்தெடுக்கப்படும். அவர்களின் நடிப்பின் அடிப்படையில் குறைந்த பாயிண்ட் பெறும் ஜோடி வெளியேற்றப்படும். ஹார்ட்-கோர் சுற்றுகள் மூலம் தக்க வைத்து வெல்லும் முதல் 4 ஜோடிகள் இறுதிப் போட்டியில் நுழைவர்.
நிகழ்ச்சியின் நடுவர்களாக மதுரை முத்து, ஐஸ்வர்யா, பாபா பாஸ்கர் பங்கேற்க பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் ரக்ஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள்.